லோகேஷ் கனகராஜ் மாநகரம்,கைதி,மாஸ்டர் தொடர்ந்து உலக நாயகன் கமலஹாசனை வைத்து விக்ரம் திரைப்படத்தை கொடுத்து அசத்தி உள்ளார்.
கடந்த நான்கு வருடங்களாக சினிமா பக்கமே தலை திரும்பாமல் இருந்த கமலஹாசனை வைத்து இப்படி ஒரு படத்தை கொடுத்துள்ளது மிகப்பெரிய பலருக்கும் ஆச்சரியத்தை கொடுத்துள்ளது.
விக்ரம் படத்தில் கமலுடன் கைகோர்த்து பகத் பாசில், விஜய் சேதுபதி, சூர்யா, நரேன், காயத்ரி, ஏஜென்ட் டினா மற்றும் பலர் கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தில் பின்னி பெடல் எடுத்து உள்ளனர்
குறிப்பாக பத்து நிமிடம் தான் சூர்யா வந்தாலும் ரோலக்ஸ் கதாபாத்திரத்தில் மிரட்டியுள்ளார்.
உலக அளவில் விக்ரம் திரைப்படம் முதல் நாள் மட்டுமே 66 கோடி வசூல் செய்தது என கூறப்படுகிறது.
ஜூன் 3-ஆம் தேதி வெளியான விக்ரம் திரைப்படம் வார இறுதியில் உலகளவில் ரூ.150 கோடி வசூலை வெற்றிகரமாகத் தாண்டியது.
தற்போது கிடைத்துள்ள தகவல் என்னவென்றால் 19 நாள் முடிவில் கமலின் விக்ரம் திரைப்படம் 374 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழகத்தில் – 162 கோடிகள், கேரளாவில் – 36 கோடிகள், AP – / TS – 20 50 கோடிகள், கர்நாடகா – 22 கோடிகள், ரெஸ்ட் ஆஃப் இந்தியா – 9.75 கோடிகள், ஓவர்சேஸ் – 114 கோடிகள், மொத்தம் 374 கோடி வசூல் செய்ததாக கூறப்படுகிறது