உலகநாயகன் கமல் நடிப்பில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடந்த ஜுன் மாதம் வெளியான திரைப்படம் விக்ரம்.
பெரிய எதிர்பார்ப்புடன் முக்கிய நட்சத்திரங்களின் நடிப்பில் வெளியான விக்ரம் திரைப்படம் சிறந்த விமர்சனங்களை பெற்று மக்களிடையே பேராதரவை பெற்றது.
இந்த படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில் மற்றும் சூர்யாவின் நடிப்பானது நடிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது.
அதன்படி விக்ரம் திரைப்படம் உலகளவில் ரூ. 450 கோடிக்கும் மேல் வசூலை குவித்து சாதனை படைத்தது.
விக்ரம் திரைப்படம் 100ஆவது நாளில் அடியெடுத்து வைத்துள்ளது. 100ஆவது நாள் வெற்றியைக் கொண்டாடும் விதமாக புதிய போஸ்டரை நடிகர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ளார்.
இந்நிலையில் தற்போது விக்ரம் திரைப்படத்தின் 100-வது நாள் வெற்றி விழா நவம்பர் 7-ம் தேதி சென்னையில் உள்ள கலைவாணர் அரங்கில் நடைபெற இருப்பதாக அதிகாரபூர்வமாக அறிவித்து இருக்கின்றனர்.
ஆரம்பத்தில் இருந்தே விக்ரம் திரைப்படத்திற்கு பல்வேறு விழா வைத்து கொண்டாடி வந்த நிலையில் தற்போது 100-வது நாள் வெற்றி விழாவை கொண்டாட இருக்கின்றனர்.