வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் 'வாரிசு' திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நேரடியாக வெளியாக உள்ளது. 

இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். மேலும், பிரகாஷ்ராஜ், சரத்குமார், குஷ்பூ, ஷாம், யோகி பாபு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். 

இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 

தீபாவளி தினத்தன்று 'வாரிசு' திரைப்படத்தின் போஸ்டரை வெளியிட்டு, சங்கராந்திக்கு திரைப்படம் வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்திருந்தது.  

இதையடுத்து 'வாரிசு' படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை படக்குழு வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்தது. 

இந்நிலையில், சென்னையில் நடைபெற்ற வாரிசு படப்பிடிப்பு தளத்திற்கு தில் ராஜு மற்றும் அவரது குடும்பத்தினர் வந்தனர். 

அப்போது தில் ராஜுவின் குழந்தையை நடிகர் விஜய் கையில் வைத்திருக்கும் புகைப்படம் தற்போது இணையதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.  

இந்த புகைப்படத்திற்கு ரசிகர்கள் பலரும் லைக்குகளை குவித்து வருகின்றனர்.