இன்று 48வது பிறந்த நாளை கொண்டாடும் இளைய தளபது விஜய் குறித்த சில சுவாரஸ்ய குறிப்புகள்.
விஜயின் மனைவியான சங்கீதா,திருமணம் ஆவதற்கு முன்பு இருந்தே விஜயின் தீவிர ரசிகையாக இருந்தார்.
விஜய் தீவிர சூப்பர் ஸ்டார் ரசிகர்.பாலிவுட்டில் அமிதாப்பச்சன் ரசிகர்.
நாளைய தீர்ப்பு படத்தில் நாயகனாக விஜய் அறிமுகமாகும் போது அவருக்கு 19 வயது மட்டுமே.
விஜய் தமிழ் திரையுலகில் அறிமுகமாகி 37 வருடங்களும்,கதாநாயகனாக அறிமுகமாகி 29 வருடங்கள் ஆகின்றன.
சென்னை லயோலோ கல்லூரியில் படித்த விஜய்,நண்பர்கள் அடிக்கும் ஜோக்குகளுக்கு விழுந்து விழுந்து சிரிப்பாராம்.
தமிழ் திரையுலகில் விஜய் அறிமுகமான முதல் படம் 1985-ஆம் ஆண்டு வெளியான ’நான் சிகப்பு மனிதன்’.
இளைய தளபதி என்ற அடைமொழிக்கு பின்னர் விஜய்க்கு இருக்கும் மற்றொரு பிரபலமான அடை மொழி ‘ விஜய் அண்ணா’.
தளபதி 66 படத்திற்கு வாரிசு என்று தலைப்பு வைக்கப்பட்டு ஃபஸ்ட் லுக் வெளியாகி உள்ளது
மேலும் பார்க்க