தமிழ் சினிமாவின் இரண்டு உச்ச நட்சத்திரங்களாக ஜொலித்து வருபவர்கள் விஜய் மற்றும் அஜித். 

மிக பெரிய ரசிகர்கள் பட்டாளத்தை வைத்துள்ள இவர்கள் ஒரே நாளில் திரைப்படத்தை வெளியிடுவது தமிழ் சினிமாவின் மிக பெரிய மோதல்களில் ஒன்றாக பார்க்கப்படுகிறது. 

அப்படி கடைசியாக 8 வருடங்களுக்கு முன்பு ஜில்லா மற்றும் வீரம் திரைப்படங்கள் ஒரே நாளில் வெளியானது. 

இதில் இரண்டு திரைப்படங்களில் பாக்ஸ் ஆபிஸில் வசூலை குவித்தன. 

இந்நிலையில் தற்போது விஜய்யின் வாரிசு திரைப்படம் 2023 பொங்கல் பண்டிகையில் வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுவிட்டது. 

ஆனால் தற்போது வாரிசு படத்துன் அஜித்தின் AK61 படமும் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது. 

ஆம், அதன்படி அஜித் நடித்து வரும் AK61 படத்தை தமிழகத்தின் முன்னணி விநியோக நிறுவனம் பொங்கல் பண்டிகைக்கு வெளியிட திட்டமிட்டு உள்ளதாக தகவல் வெளியாக பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.   

இந்த இரு படமும் மோதினால் ரசிகர்களுக்கு இது மிக பெரிய விருந்தாக அமையும்.