வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் 'வாரிசு' திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நேரடியாக வெளியாக உள்ளது. 

இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். 

இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தீபாவளி தினத்தன்று 'வாரிசு' திரைப்படத்தின் போஸ்டரை வெளியிட்டு, பொங்கலுக்கு திரைப்படம் வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்திருந்தது. 

இப்படத்தின் முதல் பாடலான 'ரஞ்சிதமே' பாடலை கடந்த 5-ம் தேதி படக்குழு வெளியிட்டது.

இந்நிலையில், இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்து புதிய தகவல் வெளியாகியுள்ளது. 

அதன்படி, 'வாரிசு' படத்தின் இசை வெளியீட்டுவிழா சென்னை நேரு உள் விளையாட்டரங்கில் டிசம்பர் 24-ஆம் தேதி பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.  

இதனால் விஜய் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.