முத்தையா இயக்கத்தில் கார்த்தி, அதிதி சங்கர் நடித்துள்ள திரைப்படம் 'விருமன்'. 

யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இந்தப் படத்தில் பிரகாஷ் ராஜ், சூரி, கருணாஸ், ராஜ்கிரண், வடிவுக்கரசி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். 

2டி என்டர்டெயின்ட்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படம் தமிழகம் முழுவதும் 475 திரைகளில் வெளியானது.

கலவையான விமர்சனங்களைப் பெற்ற இப்படம், முதல் நாளில் ரூ.8.20 கோடி ரூபாய் வசூலை ஈட்டியது. 

இரண்டாம் நாளான சனிக்கிழமை ரூ.10 கோடியை வசூலித்தது. 

மூன்றாம் நாள் ரூ.10.85 கோடி என மொத்தம் 3 நாட்களில் மட்டும் படம் ரூ.30 கோடியை வசூலித்துள்ளது. 

நான்காவது 4 நாளான நேற்று படம் ரூ.7 முதல் ரூ.9 கோடி வரை வசூலித்திருக்கலாம் என கூறப்படுகிறது.

கார்த்தி நடித்த படங்களில் அதிகபட்ச ஓப்பனிங் கிடைத்த படம் இதுதான் என்றும் குறிப்பிடப்படுகிறது.