பிக்பாஸ் தமிழ் 6-வது சீசன் கடந்த அக்டோபர் 9-ஆம் தேதி கோலாகலமாக தொடங்கியது. 

விறுவிறுப்பாக நடைபெற்று வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் நபராக சாந்தி எலிமினேட் செய்யப்பட்டார். 

மேலும் ஜி.பி. முத்து தாமாக முன் வந்து நிகழ்ச்சியை விட்டு வெளியேறினார். பின்னர் அசல், ஷெரினா, மகேஷ்வரி உள்ளிட்டோர் எலிமினேட் செய்யப்பட்டனர்.  

இதில் தற்போது 16 நபர்கள் வீட்டினுள் இருக்கின்றனர். பிக்பாஸ் நிகழ்ச்சி இன்றுடன் 38-வது நாட்களை நெருங்கியுள்ளது. 

இதில் ராஜகுருவாக இருக்கும் விக்ரமனை பார்த்து, உங்க சாப்பாட்டில் எச்சை காரி துப்பி கொடுப்பேன் சாப்பிடுவீங்களா? என்று படைத்தளபதியாக இருக்கும் அசீம் கேட்கிறார்.  

அனாவசியமாக பேசிய அசீமை கண்டித்து விக்ரமன், ஏய் இப்படியெல்லாம் பேசாதீங்க என கோபத்தில் ஒருமையில் எச்சரிக்கிறார். இருவரும் மாறி மாறி சண்டையிட்டுக் கொள்வதை உடன் இருக்கும் சக போட்டியாளர்கள் சமாதானப்படுத்த முயல்கின்றனர். 

இதற்குமுன்பு விக்ரமன் மற்றும் ஆயிஷாவை ஒருமையில் பேசி அசீம் சர்ச்சையில் சிக்கியது குறிப்பிடத்தக்கது.