சினிமா உலகில் ரசிகர்களை கவர்ந்த நகைச்சுவை நடிகராக வலம் வருகிறார் நடிகர் சந்தானம்.
இவர் நடிப்பில் உருவாகும் திரைப்படங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.
அந்த வகையில் ‘குலு குலு’ என்ற படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார்.
இந்த படத்தை மேயாத மான், ஆடை ஆகிய படங்களை இயக்கிய ரத்னகுமார் இயக்கி வருகிறார்.
இந்த படத்தில் அதுல்யா சந்த்ரா, நமீதா கிருஷ்ணமூர்த்தி, பிரதீப் ராவத், மரியம் ஜார்ஜ், ‘லொள்ளு சபா‘ மாறன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
சந்தானத்தின் ‘குலுகுலு’ படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
இதில் ஊர் ஊராக சுற்றும் தேசாந்திரியாய் சந்தானம் நடித்துள்ளார் என்பது தெரிகிறது.
ரெட் ஜெயன்ட் மூவிஸ் இன்று இரவு 9 மணிக்கு ஒரு தகவலை வெளியிடுவதாக அறிவித்தது.
அதன்படி ரெட் ஜெயன்ட் மூவிஸ் இப்படத்தை ஜூலை 29 ஆம் தேதி வெளியிடுவதாக அறிவித்துள்ளது.