பொன்னியின் செல்வன் சரித்திர திரைப்படம் இன்று வெற்றிகரமாக வெளியாகியுள்ளது. மணிரத்னத்தின் லட்சிய திட்டமாகும், மேலும் இந்த வரலாற்று காவியத்தின் மீது ரசிகர்கள் அதிக நம்பிக்கை வைத்துள்ளனர். தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய 5 மொழிகளில் இந்திய அளவில் வெளியாகும். 

கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலை மையமாக வைத்து இப்படத்தை எடுத்துள்ளார் மணிரத்னம். 

படத்தில் சியான் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, த்ரிஷா, கார்த்தி, ஐஸ்வர்யா ராய் பச்சன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள இந்தப் படத்தில் சரத்குமார், பிரகாஷ் ராஜ், பிரபு, ஜெயராம், லால், ஆர் பார்த்திபன், மோகன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். 

படத்தின் ஏ.ஆர்.ரஹ்மானின் பாடல்கள் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாகி இசை பிரியர்களின் பிளேலிஸ்ட்களில் இடம் பிடித்துள்ளது. 

அதன்படி இப்படத்தில் கார்த்தி மற்றும் சியான் விக்ரமின் நடிப்பு, ஏ.ஆர்.ரகுமான் பாடல்கள் மற்றும் பின்னணி இசை, கதை, காட்சியமைப்பு, பிரம்மாண்ட தயாரிப்பு ஆகியவை பாசிட்டிவ் என்றும் சில இடங்களில் தொய்வு ஏற்படுவது நெகட்டிவ் என பதிவிட்டுள்ளனர்.

1955ஆம் ஆண்டு புத்தகமாக வெளியான இந்த நாவல் கிட்டத்தட்ட 67 ஆண்டுகளுக்குப் பிறகு மணிரத்னத்தின் கடும் முயற்சியால் படமாக வெளியானது பலரும் பாராட்டி வருகின்றனர்.

இப்படம் தமிழர்களின் பெருமை என்று நெட்டிசன்கள் கொண்டாடி வருகின்றனர். அதேநேரத்தில் பாகுபலியோடு இப்படத்தை கம்பேர் செய்ய வேண்டாம் என்றும், இது வேற லெவலில் இருப்பதாகவும் பதிவிட்டு வருகின்றனர்.  

படத்தை பார்த்த ரசிகர் ஒருவர் பூரிப்பில் 70 வருட கனவு இறுதியில் நிறைவேறியது என ட்வீட் செய்துள்ளார்.