கிரிக்கெட்டில் பேட்டிங் துறையில் எப்படி பந்து போட்டாலும் சூழ்நிலை எதுவாக இருந்தாலும் முதல் பந்திலிருந்தே சரவெடியாக பேட்டிங் செய்வது தனி திறமையாகும்.

அதிலும் இந்த நவீன கிரிக்கெட்டில் 3 வகையான போட்டிகளிலும் அதிரடியாக விளையாட வேண்டியது அவசியமானதாகிறது. இதற்குச் சிறந்த எடுத்துக்காட்டு என்றால் இந்தியாவின் வீரேந்திர சேவாக்கை கூறலாம்.

பந்து வீச்சாளர்கள் செட்டாவதற்கு முன்பாகவே அவர்களுக்கு கருணை காட்டாமல் முதல் பந்திலிருந்தே பவுண்டரிகளை பறக்கவிடும் திறமை பெற்ற அவர் டெஸ்ட் கிரிக்கெட்டாக இருந்தாலும் பொறுமையை காட்டாமல் ராக்கெட் வேகத்தில் ரன்களை சேர்த்து ரசிகர்களை விரும்பிப் பார்க்க வைத்தவர்.

1999 – 2013 வரையிலான காலகட்டத்தில் மிகச்சிறந்த தொடக்க வீரராக எதிரணிகளை வெளுத்து வாங்கிய அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் 2 முச்சதங்களை அடித்த ஒரே இந்திய பேட்ஸ்மேனாக வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார்

இந்திய கிரிக்கெட்டில் சில வீரர்கள் அடுத்த சேவாக் கிடைத்து விட்டார் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தும் அளவுக்கு ஆரம்பத்தில் அதிரடியான செயல்பட்டனர்.

ஆனால் ஒரே சூரியன் ஒரே சேவாக் என்பது போல் பல்வேறு காரணங்களுக்காக நம்பிக்கை கொடுத்தாலும் அவரின் வளர்ச்சியில் பாதி கூட எட்டாத சில வீரர்களை பற்றி பார்ப்போம்.

ராபின் உத்தப்பா

அம்பத்தி ராயுடு

தினேஷ் கார்த்திக்

மனிஷ் பாண்டே

யூசுப் பதான்