நயன்தாராவுடன் நான் 8வது ஆண்டாக பிறந்த நாளை கொண்டாடுகிறேன் என்று இயக்குனர் விக்னேஷ் சிவன் வெளியிட்டுள்ள பிறந்தநாள் வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

தமிழ் திரையுலகின் பிரபல இயக்குனர் விக்னேஷ் சிவன் சமீபத்தில் நயன்தாரா மற்றும் தனது குடும்பத்தினருடன் துபாயில் பிறந்தநாள் கொண்டாடினார்

தமிழ் திரையுலகின் பிரபல இயக்குனர் விக்னேஷ் சிவன் சமீபத்தில் நயன்தாரா மற்றும் தனது குடும்பத்தினருடன் துபாயில் பிறந்தநாள் கொண்டாடினார்

இது குறித்து விக்னேஷ் சிவன் கூறிய போது, ‘நயன்தாராவுடன் நான் 8வது முறையாக பிறந்தநாள் கொண்டாடுகிறேன்.

என் தங்கமே உனக்கு எனது நன்றி! ஒவ்வொரு பிறந்த நாளையும் முந்தைய பிறந்தநாளை காட்டிலும் சிறப்பானதாக மாற்றியுள்ளாய்.

ஆனால் இந்த பிறந்தநாள் எனக்கு மிகவும் உணர்ச்சிவசமானது. உன்னை காதலியாக அடைந்ததற்கு நன்றி! என்னை மிகவும் மகிழ்ச்சி அடைய செய்வது எப்படி என்பது உனக்கு தெரியும்.

அதை நீதான் எனக்கு கற்றுக் கொடுத்தாய். நீ என்னை நேசிக்கும் விதம் என்னை மென்மேலும் மகிழ்ச்சி அளிக்கிறது’ என்று கூறியுள்ளார்.

இந்த வீடியோவில் விக்னேஷ் சிவனுக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறும் நயன்தாரா துள்ளிக்குதிக்கும் காட்சிகளும் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.