2022 ஆம் ஆண்டில் இணையத்தில் அதிகம் தேடப்பட்ட நபர்களின் அறிக்கையை கூகுள் நிறுவனம் வெளியிட்டுள்ளது
அதன்படி அதிகம் தேடப்பட்ட நபர்களின் பட்டியலில் நடிகர் விஜய், காஜல் அகர்வால், கீர்த்தி சுரேஷ் மற்றும் சமந்தா ஆகியோர் தமிழ் நடிகர்கள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளனர்.
இந்தப் பட்டியலில் தனுஷ், சூர்யா, ரஜினிகாந்த், ராஷ்மிகா மந்தனா ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர்.
இதில் டோலிவுட் மற்றும் பாலிவுட் நட்சத்திரங்கள் அல்லு அர்ஜுன், மகேஷ் பாபு, சல்மான் கான் மற்றும் ஷாருக்கான் ஆகியோரும் இடம்பிடித்துள்ளனர்.
தமிழ் நடிகர்களான விஜய், தனுஷ், சூர்யா, ரஜினிகாந்த் ஆகியோர் டாப் 100 பட்டியலில் இடம் பிடித்துள்ளனர்.
சித்து மூஸ் வாலா 3வது இடத்திலும், மறைந்த பாடகி லதா மங்கேஷ்கர் 6வது இடத்திலும், நடிகை காஜல் அகர்வால் 15வது இடத்திலும் உள்ளனர்.
இதில் முதல் தமிழ் நடிகர் விஜய். அதிகம் தேடப்பட்டோருக்கான பட்டியலில் 22வது இடத்தை பெற்றுள்ளார்.
சமந்தா 18வது இடத்தையும் நடிகை நயன்தாரா 33வது இடத்தையும் பிடித்துள்ளனர்.
நடிகர் ரஜினிகாந்த் 77வது இடத்தை பிடித்துள்ளார்.
இந்தப் பட்டியலில் நடிகர்கள் அஜித், கமல்ஹாசன் ஆகியோருக்கு இடம்பெறவில்லை.