நீண்ட இடைவேளைக்கு பிறகு செல்வராகவன் தனுஷ் கூட்டணியில் இணைந்த படத்திற்கு பெரிய எதிர்ப்பார்ப்பு கிளம்பியது. இந்த படத்தில் இந்துஜா ரவிச்சந்திரன், செல்வராகவன், பிரபு, யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.

படத்தின் கதைக்களம் காட்டுக்குள் வசிக்கும் வேடனாக ஒரு தனுசும், அந்த காட்டுக்கு ஒரு பணி நிமித்தமாக குடும்பத்துடன் செல்லும் என்ஜினீயராக ஒரு தனுசும் தோன்றுகிறார்கள். 

படத்தின் ரன்னிங் டைம் 2 மணி நேரம் 15 நிமிடங்கள் தகவல் வெளியாகி உள்ளது.இந்நிலையில் நானே வருவேன் திரைப்படத்தின் டிஜிட்டல் உரிமையை ரூ. 25 கோடிக்கு அமேசான் நிறுவனமும், சாட்டிலைட் உரிமையை ரூ. 18 கோடிக்கும் சன் டிவியும் வாங்கியுள்ளது. 

தமிழ் சினிமாவில் 70 ஆண்டுகளாக பல்வேறு ஜாம்பவான்கள் எடுக்க முயற்சித்த பொன்னியின் செல்வன் திரைப்படம், தற்போது மணிரத்னம் மூலம் சாத்தியமாகி உள்ளது. தமிழ் சினிமாவின் கனவு திரைப்படமான பொன்னியின் செல்வன் இன்று தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் என 5 மொழிகளில் பான் இந்தியா படமாக ரிலீஸ் ஆகி உள்ளது. 

பொன்னியின் செல்வன் படத்தில் ஆதித்த கரிகாலனாக சியான் விக்ரமும், அருண்மொழி வர்மனாக ஜெயம் ரவியும், வந்தியத்தேவனாக கார்த்தியும், குந்தவையாக திரிஷாவும், நந்தினியாக ஐஸ்வர்யா ராயும் நடித்துள்ளனர். கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலை மையமாக வைத்து இப்படத்தை எடுத்துள்ளார் மணிரத்னம். 

மொத்தத்தில் நிதானமாக நகரும் திரைக்கதை, சில இடங்களில் பிசகும் சிஜி, நாவல் வாசிக்காதவர்களுக்கான முழுமையில்லாத காட்சிகள் என சில குறைகள் இருந்தாலும், ரசிகர்களுக்கு காட்சி அனுபவ விருந்து படைக்கிறது பொன்னியின் செல்வன். 

இதற்கிடையே பொன்னியின் செல்வன் வெளியாகும் முன்பு நானே வருவேன் 29 ஆம் தேதி வெளியான நிலையில் தனுஷ் - செல்வராகவன் கூட்டணியில் உருவாகியுள்ள இப்படத்திற்கு எதிர்பார்ப்பு குறைவாகவே இருக்கிறது.

இதற்க்கு முன்னரும் இரண்டு பெரிய திரைப்படங்கள் ஏற்கனவே இதே போல் வெளியாகி வெற்றியடைந்து இருக்கின்றன. உதாரணமாக பேட்ட - விஸ்வாசம், ஜில்லா - வீரம் உள்ளிட்ட திரைப்படங்களை கூறலாம்.

அதனால் இதில் எந்த படம் மிக பெரிய வெற்றி படமாக அமையும் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.