தமிழ் சினிமாவில் தற்போது நிறைய புதுமுக இளம் இயக்குனர்கள் அதிகம் சாதனை செய்து வருகிறார்கள்.
அதற்கு ஒரு உதாரணம் அண்மையில் வெளியான லவ் டுடே,விக்ரம் திரைப்படம் தான்.
ரசிகர்களும் காலத்திற்கு ஏற்ப மாற தொடங்கி விட்டனர். இப்போது எல்லாம் ரசிகர்கள் நடிகர்களை பார்த்து திரைக்கு வருவதில்லை, ஒரு கதை நன்றாக இருந்தால் அது யாருடைய படமாக இருந்தாலும் ஹிட்டடிக்க வைத்துவிடுகிறார்கள்.
அப்படி மாநகரம், கைதி போன்ற வெற்றிப் படங்களை கொடுத்த லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் விக்ரம் வெளியாகி செம ஹிட்டடித்தது.
இப்போது மீண்டும் விஜய்யுடன் விஜய் 67 படத்தில் லோகேஷ் கனகராஜ் இணைகிறார் என கூறப்படுகிறது.
அண்மையில் ஒரு பேட்டியில் லோகேஷ் கனகராஜிடம், அஜித்தின் படங்களை ரீமேக் செய்யும் வாய்ப்பு கிடைத்தால் எந்த படத்தை செய்வீர்கள் என கேட்டுள்ளனர்.
அதற்கு லோகேஷ் அவரின் தீனா படத்தை ரீமேக் செய்வேன் என கூறியுள்ளார்.