தமிழ் சினிமாவின் மக்கள் செல்வன் என போற்றப்படும் விஜய்சேதுபதி முன்னணி ஹீரோவாக மட்டுமல்லாமல் தற்போழுது தொடர்ந்து வில்லனாக நடித்து தெறி ஹிட் கொடுத்து வருகிறார்.

சமீபத்தில் கமல்ஹாசனின் விக்ரம் படத்தில் வில்லனாக நடித்துள்ளார், அவர் தற்போது பல திரைப்படங்கள் வில்லனாகவும் மற்றும் பல மொழிகளில் வெப் சீரிஸ்களில் பிஸியாக நடித்து வருகிறார்.

தற்போழுது இயக்குநர் ஸ்ரீராம் ராகவன் ‘அந்தாதூன்’ படத்தின் வெற்றியை தொடர்ந்து இந்தியில் விஜய் சேதுபதி நடிக்கும் ‘மெர்ரி கிறிஸ்துமஸ்’ என்ற படத்தை இயக்கவுள்ளார். 

இப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக பிரபல பாலிவுட் நடிகை கத்ரீனா கைஃப் இணைந்து நடிக்கவுள்ளார். 

இந்திப்படத்திலும் விஜய் சேதுபதி தமிழில் தான் பேசுவதாகவும் அந்த விதத்தில் தான் கதை அமைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது, 

மேலும் நடிகை கத்ரீனா கைஃப் இவர் பேசும் தமிழ் புரிந்தால் மட்டுமே அவர் இந்தியில் அடுத்து பேசமுடியும்.

இந்த நிலையில் இயக்குனர் புது முயற்சியாக டப்பிங் கலைஞர் தீபா வெங்கட் படத்தில் இணைத்துள்ளார். 

இந்த நிலையில் இயக்குனர் புது முயற்சியாக டப்பிங் கலைஞர் தீபா வெங்கட் படத்தில் இணைத்துள்ளார். 

இந்தி படத்தில் கத்ரீனா கைஃப் தமிழ் பேசினாலும் ஆச்சரியம் இல்லை என சினிமா வட்டாரங்கள் கூறுகிறது.