நடிகர் கமல்ஹாசன் இன்றைய பிக் பாஸ் ஷோவில் முன் எப்போதும் இல்லாத வகையில் போட்டியாளர்களை எச்சரித்து இருக்கிறார். 

பிக் பாஸ் ஷோ ஏற்கனவே பரபரப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில் தொடர்ந்து பல பிரச்னைகள் போட்டியாளர்கள் நடுவில் வந்துகொண்டிருக்கிறது. 

பிக் பாஸ் ஷோ ஏற்கனவே பரபரப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில் தொடர்ந்து பல பிரச்னைகள் போட்டியாளர்கள் நடுவில் வந்துகொண்டிருக்கிறது. 

அவர் குறைந்த அளவு வாக்குகள் பெற்ற நிலையில் அவர் வெளியேற்றப்படுகிறார். 

பிக் பாஸ் வீட்டில் போட்டியாளர்கள் டாஸ்க்குக்கு சரியான நேரத்திற்கு வருவதில்லை, வேறு மொழிகளில் பேசுவது, மைக்கை மூடிக்கொண்டு பேசுவது, ரகசியமாக பேசுவது, எழுதி காட்டுவது என செயல்களில் ஈடுபடுவதை தான் கமல் இன்று கண்டித்து இருக்கிறார். 

ஷெரினா வீட்டில் தமிழில் பேசாமல் எப்போதும் ஆயிஷா உள்ளிட்ட போட்டியாளர்களிடம் மலையாளம் மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே பேசி வந்தார். கமல் பல முறை வார்னிங் கொடுத்தும் அது தொடர்ந்தது.

ஷெரினா இன்று வெளியேறுகிறார் என கமல் கார்டை காட்டி தான் அறிவித்து இருக்கிறர். ஆனால் அந்த கார்டு மலையாளத்தில் இருப்பது பலருக்கும் ஆச்சர்யம் கொடுத்திருக்கிறது.

பல்வேறு குற்றச்சாட்டுகளை சொன்ன கமல், 'நானே ரெட் கார்டு கொடுத்து வெளியில் அனுப்பிவிடுவேன்' என அனைவரையும் எச்சரித்தும் இருக்கிறார்.