கமல்ஹாசன் நடித்து வெளிவந்த 'விக்ரம்' படத்திற்குப் பிறகு தமிழ் சினிமாவில் பெரிய வசூலையும், லாபத்தையும் ஒரு படம் கூட கொடுக்கவில்லை என்பது உண்மை.
'அடுத்ததாக வந்த டி பிளாக், ராக்கெட்ரி, யானை' ஆகியவை மட்டும் மிகச் சுமாரான வசூலைக் கொடுத்தது.
வாரத்திற்கு 4 அல்லது 5 படங்கள் வந்தாலும், பெரிய படத்திற்காக தியேட்டர்கள் காத்துக்கொண்டிருக்கின்றனர்.
இந்த வாரம் ஜுலை 22ம் தேதியும் பல படங்கள் வெளிவர உள்ளதாக அறிவிப்பை வெளியிட்டுள்ளார்கள்.
ஆனால் அந்தப் படங்கள் எதுவுமே குறைந்தபட்ச எதிர்பார்ப்பை கூட ஏற்படுத்தவில்லை.
அவற்றின் வியாபாரங்களும் மிகவும் பெரிய அளவில் இல்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.
“தேஜாவு, மஹா, நதி, வார்டு 126, சிவி 2” ஆகிய படங்கள் இந்த வாரம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளன
இதில் எந்தப் படம் ஓடும் என்பது வார இறுதியில்தான் தெரியும்.