நடிகர் சிவகார்த்திகேயன் தனியார் தொலைக்காட்சியில் நடந்த காமெடி நிகழ்ச்சியில் பங்கேற்று வெற்றிபெற்றவர் என்பது நம் அனைவருக்கும் நன்கு தெரிந்ததே.
சிவகார்த்திகேயன் தனுஷ் நடித்த ’3’ படத்தில் தனுஷின் பள்ளித்தோழனாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
முதல் படத்தையடுத்து பாண்டிராஜ் இயக்கத்தில் ’மெரினா’ படத்தில் கதாநாயகனாக அறிமுகமானார்.
’மனம்கொத்திப்பறவை’, ’கேடி பில்லா கில்லாடி ரங்கா’, ’எதிர் நீச்சல்’, ’வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ என அடுத்தடுத்த வெற்றிப்படங்களின் மூலம் தமிழ் சினிமாவில் அடுத்த நட்சத்திரமாக உயர்ந்தார்.
சமீபத்தில் வெளியான ’டாக்டர்’ மற்றும் ’டான்’ ஆகிய படங்கள் அடுத்தடுத்து ரூ.100 கோடி வசூல் பட்டியலில் இணைந்தன.
சிவகார்த்திகேயனுக்கு தற்போது எல்லா நடிகரையும்போல ரஜினி ஆக வேண்டும் என்ற ஆசை வந்துள்ளது
அஸ்வின் இயக்கும் புதிய படத்திற்கு மாவீரன் என்று ரஜினி படத்தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.
அதில் ரஜினி நடித்து வெளியான ’தளபதி’ கெட்டப்பில் தலைமுடி வைத்துக்கொண்டு சிவகார்த்திகேயன் வருகிறார்.
அதில் ரஜினி நடித்து வெளியான ’தளபதி’ கெட்டப்பில் தலைமுடி வைத்துக்கொண்டு சிவகார்த்திகேயன் வருகிறார்.