தென்னிந்திய திரை உலகில் லேடி சூப்பர் ஸ்டார் நடிகை நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் கடந்த ஆறு ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில் கடந்த ஜூன் 9ஆம் தேதி இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

அதனைத் தொடர்ந்து திருமணம் முடிந்த கையோடு  வெளிநாட்டிற்கு ஹனிமூன் சென்றார்கள். 

அதன் பின்னர் அண்மையில் விக்னேஷ் பிறந்த நாளைக்கு நயன்தாரா அவர்கள் ஒரு சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார். 

அதாவது விக்னேஷ் அவனை துபாய்க்கு அழைத்துச் சென்று அங்கு தனது குடும்பங்களுடன் சந்தோஷமாக விக்னேஷ் சிவனின் பிறந்த நாள் விழாவை கொண்டாடினார்கள். 

துபாய் பயணத்தின் போது எடுத்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு வருகிறார் அதில் நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் குழந்தைகளோடு விளையாடிய போது எடுத்த புகைப்படத்தை தற்போது விக்னேஷ் சிவன் அவர்கள் தனது instagram பக்கத்தில் வெளியிட்டுள்ளார். 

அதில் குழந்தைகளுடன் எப்படி இருக்க வேண்டும் என்று எதிர்காலத்திற்காக நாங்கள் பயிற்சி எடுக்கிறோம் என்று குறிப்பிட்டுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் நயன்தாரா கர்ப்பமாக இருக்கிறாரா? என்ற கேள்வி எழும்பியுள்ளது 

அதுமட்டுமல்லாமல்  சீக்கிரமாகவே நயன்தாரா வீட்டில் குவா குவா சத்தம் கேட்கலாம் என கமெண்ட் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார்கள். 

ஆனால் நயன்தாரா தற்போது பல திரைப்படங்களில் கமிட் ஆகியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது அதுமட்டுமல்லாமல் தற்போது அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடித்து வரும் ஜவான் திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.