இயற்கை நமக்கு கொடுத்துள்ள அற்புதமான பொருட்களில் தேன் ஒரு மிகச்சிறந்த மருத்துவ குணம் கொண்டதாகும். 

தேன் மூலம் பல நோய்களை குணப்படுத்த முடியும். தேன் எண்ணற்ற சத்துக்களை இயற்கையாகவே கொண்டுள்ளது.

விரைவில் செரிப்புத் தன்மையை உண்டாக்கி, மலச்சிக்கலை போக்குகிறது. 

கண் நோய், தோல் நோய்களுக்கும் தேனை பயன்படுத்தலாம். வெங்காயச்சாறுடன் தேனை கலந்து சாப்பிட்டால் கண் பார்வை பிரகாசம் அடையும்.

இளம் சூடான வெந்நீருடன் எலுமிச்சம் பழச்சாறு கலந்து, தேனை  அருந்தினால், வாந்தி, குமட்டல்,  ஜலதோஷம், தலைவலி போன்ற நோய்கள் குணமாகும்.

தேன், முட்டை,பால் கலந்து சாப்பிட்டால் ஆஸ்துமா நோயில் சிக்காமல் தப்பலாம்.

தேனுடன் இஞ்சி, விதை நீக்கிய பேரிச்சம்பழத்தை ஊற வைத்து சாப்பிடுவதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகும் .

தூக்கம் ஏற்படுவதற்கு தேன் அருமையான மருந்து ஆகும்.

தேனும், சூடான வெந்நீரும் கலந்து சாப்பிட்டால் பருத்த உடல் குறையும்.