பாதவெடிப்பு என்பது அனைவருக்கும் ஏற்படக்கூடிய ஒரு பொதுவான பிரச்சனையாகும்

பெண்களுக்கு அதிகமாக பாதவெடிப்பு ஏற்படும் வாய்ப்புள்ளது.

பாதங்களில் ஈரப்பதத்தை பாதுகாத்து பாதவெடிப்பு ஏற்படாமல் தடுக்கும் சில பொருட்களை தற்போது காணலாம்

வாழைப்பழத்தை மசித்து பாதங்களில் தடவி 20 நிமிடங்கள் விட்டு கழுவலாம்.

தேன் கலந்த வெதுவெதுப்பான நீரில் பாதங்களை ஊறவைத்து 20 நிமிடங்கள் கழித்து அலம்பவும்.

இரவில் கற்றாழையைப் பாதங்களில் தடவி, காலுறை அணிந்து தூங்கவும். காலை எழுந்து பாதங்களை கழுவவும்.

சருமம் மிருதுவாக சமையல் சோடா உதவும். சமையல் சோடா கலந்த வெந்நீரில் 15 நிமிடங்கள் பாதங்களை ஊறவிடவும்.