சினிமா உலகில் பிரம்மாண்ட பட்ஜெட் படங்கள் தான் மிகப்பெரிய வசூலை அள்ளுகிறது என நாம் நினைத்துக் கொண்டிருக்கோம்
ஆனால் உண்மையில் குறைந்த பட்ஜெட் படங்கள் தான் தயாரிப்பாளர்களுக்கு அதிக லாபத்தை கொடுக்கிறது
அப்படி தமிழ் சினிமாவில் குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு அதிக வசூலை அள்ளிய திரைப்படங்களை தற்போது பார்ப்போம்.
ராட்சசன் - 5 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இது சுமார் 28 கோடி வசூலை ஈட்டி அசத்தியது
கனா - 3 கோடி பட்ஜெட்டில் உருவான இந்த திரைப்படம் சுமார் 22 கோடி வசூல் செய்தது
சதுரங்க வேட்டை - 5 கோடி பட்ஜெட்டில் உருவான இந்த திரைப்படம் சுமார் 25 கோடி வசூல் செய்தது
தேசிங்கு ராஜா - 5 கோடி பட்ஜெட்டில் உருவான இந்த திரைப்படம் சுமார் 30 கோடி வசூல் செய்தது
96 - 16 கோடி பட்ஜெட்டில் உருவான திரைப்படம் 80 கோடி வசூல் செய்தது