நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6-வது சீசன் கடந்த 9-ம் தேதி தொடங்கியுள்ளது.  

மைனா நந்தினி வைல்ட்கார்ட் எண்ட்ரியாக 21-வது நபராக பிக்பாஸ் வீட்டிற்குள் வந்தார். 

பிக்பாஸில் பொதுவாக 40 நாட்களை கடந்து வரும் சண்டைகள் அனைத்தும் இந்த சீசனின் முதல் இரண்டு நாட்களிலேயே தொடங்கிவிட்டது. கடந்த வாரத்தில் அது வெடித்து சிதறியது. 

ஜிபி முத்து கடந்த வாரத்தில் தனக்கு குழந்தைகள் மீது நினைவாக இருக்கிறது என சொல்லி தன்னை வெளியில் அனுப்பி விடும்படி கூறினார். அவரை சமாதானம் செய்ய பிக் பாஸ் முயற்சித்தாலும் அவர் ஏற்றுக்கொள்ளவில்லை. 

இந்நிலையில் கடந்த சனிக்கிழமை கமல்ஹாசன் வந்த எபிசோடில் ஜிபி முத்து உடன் தனியாக பேசினார். அப்போது கமல் ஜிபி முத்துவிற்கு சமாதானம் கூறியும் அவர் அதை ஏற்றுக்கொள்ளவில்லை.  

அதனைத் தொடர்ந்து ஜிபி முத்துவின் உணர்வுக்கு மதிப்பளித்து வெளியில் அனுப்புவதாக கமல் கூறி அவரை வீட்டில் இருந்து வெளியே அனுப்பினார். 

இதனை சற்றும் எதிர்பாராத ரசிகர்கள் பிக்பாஸ் வீட்டில் ஜிபி முத்து இல்லை என்றால் சுவாரஸ்யமாக இருக்காது என்று கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.  

மேலும் பிக்ப்பாஸ் நிகழ்ச்சி குறித்து தொடர்ந்து பேசிவரும் திரையுலக பிரபலங்களும் ஜிபி முத்து மீண்டும் நிகழ்ச்சியில் கலந்துகொள்வார் என்றே தெரிவித்து வருகின்றனர்.