பிரபல கிரிக்கெட் வீரர் ஒருவரின் படத்தில் ஜிபி முத்து மிகவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள தகவல் தற்போது வெளியாகி உள்ளது. 

பிரபல இந்திய கிரிக்கெட் வீரர், ஹர்பஜன் சிங் இந்தியாவுக்காக பல்வேறு கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி, இந்திய அணியின் வெற்றிக்கு மிகவும் உறுதுணையாக இருந்தவர்.  

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடிய போது, அவரது ஆட்டம் மற்றும் இன்றி அவரது தமிழ் பற்று அவருக்கான தனி ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கியது. இவர் திருக்குறள் மற்றும் தமிழில் போடும் பதிவுகள் மிகவும் பிரபலம்.  

இதைத் தொடர்ந்து இவர் 'பிரெண்ட்ஷிப்' என்கிற திரைப்படத்தின் மூலம் நடிகராகவும் அறிமுகமானார். இந்த படத்தில் அர்ஜுன், மிகவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்த நிலையில், லாஸ்ட்லியா, காமெடி நடிகர் சதீஷ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். 

தற்போது திரில்லர் மற்றும் காமெடி கதை அம்சம் கொண்ட மற்றொரு படத்தில் ஹர்பஜன் சிங்குக்கு ஜோடியாக நடிகை ஓவியா நடித்து வருவதாக கூறப்படுகிறது.

மேலும் இந்த படத்தில் ஜிபி முத்து மிகவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.  

இந்த படத்தின் படப்பிடிப்பு 70 சதவீதம் தற்போது முடிவடைந்து விட்டதாகவும், மீதமுள்ள காட்சிகள் விரைவில் முடிவடைந்து இந்த படம் ரிலீசுக்கு தயாராகும் என தகவல் வெளியாகி உள்ளது.  

இந்த படத்தின் படப்பிடிப்பு 70 சதவீதம் தற்போது முடிவடைந்து விட்டதாகவும், மீதமுள்ள காட்சிகள் விரைவில் முடிவடைந்து இந்த படம் ரிலீசுக்கு தயாராகும் என தகவல் வெளியாகி உள்ளது.