ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளிவந்து சூப்பர் ஹிட் அடுத்த திரைப்படம் கஜினி.
நடிகர் சூர்யா ஆக்ஷன் சென்டிமென்ட் போன்ற படங்களில் நடித்தாலும் பெருமளவு தனது கெட்டப்பை மாற்றி கொள்ள மாட்டார்
இந்தப் படத்தில் ஒரு கதாபாத்திரத்தில் ஒரு ஹேண்ட்சம் ஹீரோவாகவும், மற்றொரு கதாபாத்திரத்தில் ஒரு புதிய லுக்கில் நடித்து இருப்பார்
மேலும் இந்த படத்தின் மூலம் அதிக ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கி கொண்டார் நடிகர் சூர்யா என்பது குறிப்பிடத்தக்கது
இந்த படத்தில் சூர்யாவுடன் இணைந்து அசின், நயன்தாரா மற்றும் பல நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடித்து அசத்தினர்.
ஆனால் கஜினி திரைப்படத்தில் முதன் முதலில் நடிக்க தேர்வான ஹீரோ நடிகர் அஜித் தானாம்.
ஏ ஆர் முருகதாஸ் இந்த படத்தில் அஜித்துக்காக கதை எழுதி இருந்தாலும் சில காரணங்களால் அஜீத் அந்தப் படத்தில் நடிக்க முடியாமல் போகவே பின் நடிகர் சூர்யாவை தட்டி தூக்கியதாக கூறப்படுகிறது.
கஜினி படத்தில் நடிகர் சூர்யா சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் மனதில் இடம் பிடித்தார்.
அதன்பின் இருவரும் இணைந்து ஏழாம் அறிவு படத்தில் பணியாற்றினர் என்பது குறிப்பிடத்தக்கது அந்த படமும் சூப்பர் ஹிட் அடித்தது.