1995ம் ஆண்டு அறிமுகமான இவர் தமிழை தாண்டி தெலுங்கு, கன்னடம், ஹிந்தி மொழிகளிலும் நடித்துள்ளார்.
அருண் விஜய் 1995ம் ஆண்டு சுந்தர்.சியின் முறை மாப்பிள்ளை படம் மூலம் நாயகனாக அறிமுகமானவர்.
இவரது திரைப்பயணத்தில் முதல் வெற்றிப்படம் என்றால் அது 1998ம் ஆண்டு வெளியான துள்ளி திரிந்த காலம் படம் தான்.
அவரது அப்பா விஜய்குமாருடன் இணைந்து முதன்முதலாக நடித்த திரைப்படம் சேரன் இயக்கிய பாண்டவர் பூமி. இப்படம் சிறந்த படத்திற்காக தமிழ்நாடு மாநில விருது பெற்றது.
அருண்விஜய்க்கு பெரிய ரீச் கொடுத்த படம் என்றால் 2011ம் ஆண்டு அஜித் நடிப்பில் வெளியான என்னை அறிந்தால் படம் தான்.
சொந்தமாக Cinemas Entertainment என்ற பெயரில் தயாரிப்பு நிறுவனம் வைத்துள்ளார். குற்றம் 23 தான் அவரது தயாரிப்பு நிறுவனம் மூலம் தயாரிக்கப்பட்ட முதல் திரைப்படம்.
அருண் விஜய் என்னை அறிந்தால் படத்திற்காக சிறந்த வில்லனுக்காக நார்வே பிலிம் விருது பெற்றார்.
இவர் ஆர்த்தி என்பவரை 2006ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர்.