இன்றைய காலத்தில் மின்னணு சாதனங்கள் அதிகம் பயன்படுத்தப்படுகின்றன.
சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் மின்னணு சாதனங்கள் தொடர்ந்து பயன்படுத்துகின்றனர்
இதனால் விரைவாகவே அவர்களுக்கு கண் ஆரோக்கியம் பாதிக்கப்பட்டு விடுகிறது.
டிஜிட்டல் சாதனங்களில் பணிபுரியும் போது சரியான இடைவெளி மற்றும் சரியான தொலைவில் இருந்து வேலை செய்வது முக்கியம்.
கண் யோகா செய்வதன் மூலம் உங்கள் கண் பார்வை மற்றும் கண்களை ஆதரிக்கும் தசைகளை மேம்படுத்த இது உங்கள் மன அழுத்தத்தை கட்டுப்படுத்துகிறது.
மங்கலான அல்லது மிகவும் பிரகாசமான விளக்குகளை பயன்படுத்துவதை தவிர்க்கவும்.
திரையை அதிகம் பார்க்க வேண்டியிருக்கும் போது அடிக்கடி கண் சிமிட்டி கொண்டே இருக்க வேண்டும்.
உங்கள் கண்களை திறப்பதில் சிக்கல் இருந்தால், நீங்கள் அவற்றுக்கு ஓய்வு தர வேண்டும் என்று பொருள்
ஒரே மாதிரியான பொருட்களை நீண்ட நேரம் பார்ப்பதை தவிர்ப்பது இந்த பிரச்சனைக்கு நல்ல தீர்வாக அமையும்.