சீயான் விக்ரம் நடித்துள்ள கோப்ரா படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இயக்குநர் அஜய் ஞானமுத்து எழுத்து,இயக்கத்தில் 7 ஸ்க்ரீன் ஸ்டுடியோவின் பேனரின் கீழ் எஸ்.எஸ். லலித் குமார் தயாரித்து வரும் இந்த படம் ஆக்‌ஷன் த்ரில்லர் படமாகும். 

இத்திரைப்படம் வில்லனாக இந்திய கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் நடிக்கயுள்ளார்.இப்படத்தின் தமிழக விநியோக உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் வாங்கியுள்ளது. 

‘மகான்’ படத்தில் ரசிகர்களை ஏமாற்றிய விக்ரம், ‘கோப்ரா’ படம் மூலம்  மீண்டும் ஒருமுறை ரசிகர்களை ஏமாற்றியிருக்கிறார். 

ஜீனியஸ் கணித வாத்தியார் கதாபாத்திரத்தில் ரசிக்க வைத்த விக்ரம், மற்றொரு கதாபாத்திரத்தில் ஏமாற்றமான நடிப்பையே கொடுத்து இருக்கிறார். 

அறிமுகமான முதல் படத்திலேயே இர்பான் பதான் கதாபாத்திரத்தை நன்கு புரிந்து நடித்திருக்கிறார். முயற்சிக்கு பாராட்டுகள். நடிகை ஸ்ரீநிதி, கதாபாத்திரத்தின் ஆழமான காதல் தன்மையை புரிந்து கொண்டு நடித்திருப்பது சிறப்பு. 

வில்லனாக வரக்கூடிய ரோஷன் மேத்யூ வில்லத்தனத்தில் மிரட்டுகிறார். இவர்களைத்தவிர வேறு எந்தக் கதாபாத்திரமும் மனதில் பெரிதாக நிற்கவில்லை.  

டிமாண்டி காலணி, இமைக்கா நொடிகள் என கவனம் ஈர்த்த திரைப்படங்களை கொடுத்த அஜய் ஞானமுத்துவிடம் இருந்து நிச்சயம் இந்த மாதிரியான கதையை யாருமே எதிர்பார்க்கவில்லை.  

படத்தின் ஆகப்பெரும் பலவீனமாக அவரது கதையும், திரைக்கதையும் அமைந்ததுதான் பெரும் சோகம்.  

படத்தை கொஞ்சம் ரசிக்க வைப்பது படத்தில் இடம் பெறும் லொக்கேஷன்களும், புவன் ஸ்ரீவாசனின் ஒளிப்பதிவுதான். பாடல்கள் ரசிக்கவைத்தாலும், பின்ன்ணி இசையில் வழக்கம் போல ஆடியன்ஸை முட்டாள் ஆக்கியிருக்கிறார் ஏ.ஆர்.ரஹ்மான். 

கோப்ரா விநாயகசதுர்த்திக்கு தேவையில்லாத ஆணி ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர். மொத்தத்தில் ரசிகர்களின் எதிர்பார்ப்பை கோப்ரா பூர்த்தி செய்யவில்லை என்பதுதான் உண்மை.