பொதுவாக பலர் நெய்யை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ளமாட்டார்கள்.

ஏனென்றால் நெய் வெறும் கொழுப்பு மட்டும் நிறைந்த உணவு, ரத்தக் கொழுப்பை உயர்த்தும் குணம் உடையது என்பதே அவர்களின் எண்ணமாக இருக்கும். 

ஆனால் உண்மையில் நெய் சாப்பிட்டால், கொலஸ்ட்ராலின் அளவு குறையும்.

நெய்யில் கலோரிகள் அதிகம் இருப்பது உண்மை தான். ஆனால் அளவாக சாப்பிட்டால், அனைத்துமே நல்லது தான். 

நெய்யில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் கொழுப்பைக் கரைக்கக்கூடிய வைட்டமின்கள் அதிகம் இருப்பதால், இது இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவும். 

நெய்யானது உடலின் மெட்டபாலிசத்தை அதிகரித்து, அதிகப்படியான கொலஸ்ட்ராலை கரைத்து குறைத்துவிடும்.

நெய் உடலின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும். 

செரிமான பிரச்சனை உள்ளவர்கள் உணவில் எண்ணெய்க்கு பதிலாக நெய்யை சேர்த்தால், செரிமான பிரச்சனையில் இருந்து விடுபடலாம்.