தென்னிந்திய சின்னத்திரையில்  மிகவும் பிரபலமான ரியாலிட்டி ஷோவாக ஒளிபரப்பாகி வருகிறது பிக் பாஸ். 100 நாட்கள் பிரபலங்களை ஒரு தனி வீட்டில் தங்க வைத்து அவர்களின் நடவடிக்கையை மொத்த உலகமும் கவனிப்பது தான் இந்த ஷோவின் நோக்கமே. 

தற்போது தமிழில் பிக் பாஸ் சீசன் 6 ஒளிபரப்பாகி வருகிறது. இந்த பிக் பாஸ் ரியாலிட்டி ஷோவில் கலந்து கொள்பவர்கள் பட்டி தொட்டி எல்லாம் பிரபலமாவது வழக்கம். அந்த ஆசையில் தான் பலரும் இதில் பங்கேற்று வருகின்றனர். 

தற்போது 21 போட்டியாளர்களுடன் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 6 துவங்கிய ஒரே வாரத்தில் சண்டை சச்சரவு என சென்று கொண்டிருக்கிறது.

இந்நிலையில் காதல் ஜோடி குறித்த சர்ச்சையும் கிளம்பிவிட்டது.  

பெண்களிடம் சில்மிஷம் செய்பவராக ரசிகர்களால் கிண்டல் செய்யப்படும் அசல் மற்றொரு பெண் போட்டியாளரான நிவாவை காதலிப்பதாக கிசுகிசுக்கப்படுகிறது. 

கதிர், அசல், ஏடிகே மூவரும் ஒன்றாக அமர்ந்திருக்கையில் புடவை கட்டிக்கொண்டு நிவா வருகிறார். அவரைப் பார்த்ததும் அசல் எழுந்து சென்று விடுகிறார். 

இதனால் ஏடிகே , இனி அசல் திரும்பி வரமாட்டான். அங்கேயே தான் சுத்திக்கிட்டு இருப்பான் என கூறுகிறார். 

முன்னதாக அசலுக்காக அதிக சப்போர்ட் செய்தவர்  ஏடிகே தான். இவரே இவ்வாறு கூறியதால் அசல் - நிவா மீது காதல் வயப்பட்டதாக ரசிகர்கள் கூறுகின்றனர்.