பிரபல விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் முக்கிய பிக்பாஸ் சீசன் 6. 

பெரிய எதிர்பார்ப்பிற்கு இடையே சமீபத்தில் தொடங்கிய இந்த நிகழ்ச்சி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. 

பிக்பாஸ் சீசன் 6-ல் அனைவரின் மனதை கவர்ந்து முக்கிய கண்டெண்ட் கொடுத்து வருகிறார் ஜிபி முத்து. 

பிக் பாஸ் 6ம் சீசன் முந்தைய சீசன்களை போல இல்லாமல் முதல் நாளில் இருந்தே சண்டை, பிரச்சனை, கண்ணீர் என ஆரம்பித்து இருக்கிறது. 

ஜிபி முத்து மற்றும் தனலட்சுமி இடையே நடந்த சன்டை. ஆயிஷா மற்றும் அசல் இடையே மோதல் என பல விஷயங்கள் முதல் வாரத்தில் நடந்திருக்கிறது. 

சமீபத்தில் சக போட்டியாளருடன் சண்டையிட்டி கண்கலங்கியதால் போட்டியாளர்கள் மட்டுமின்றி வெளியில் இருக்கும் ரசிகர்களும் மனது உடைந்து போயினர். 

இந்நிலையில் இந்த வாரம் எலிமினேஷனில் தனலட்சுமி, மகேஷ்வரி, அசீம், ராம் ராமசாமி ஆகியோர் இருக்கின்றனர். கடந்த சீசனில் முதல் வாரம் எலிமினேஷன் இல்லை, இந்தமுறை அப்படி இருக்க வாய்ப்பிருக்கிறது. 

மேலும் கடந்த முறையை விட இந்த சீசனில் அதிக போட்டியாளர்கள் இருப்பதால் எலிமினேஷன் கண்டிப்பாக இருக்கும் என சொல்லப்படுகிறது.