அஸீம் மற்றும் அவரது கேங்கில் இருப்பவர்களை தான் கமல்ஹாசன் கடந்த இரண்டு வாரங்களாக கடுமையாக தாக்கி பேசி வருகிறார்.  

அதிலும் குறிப்பாக அஸீம் சொல்வதை அப்படியே செய்யும் ஆயிஷாவை அவர் விமர்சித்தார். 

பொம்மை டாஸ்கில் விளையாடமாட்டேன் என சொல்லிவிட்டு அதன் பின் எதற்காக ரச்சிதா பொம்மையை எலிமினேட் செய்தீர்கள் என கமல் கேட்டார். 

அந்த கேள்வியை கேட்டு ஆயிஷா கடும் கோபத்துடன் கமலிடம் பேசினார். 

"என்னை அப்படி வெளியே portray பண்ணிடாதீங்க" என கோபமாக ஆயிஷா கமலை பார்த்து சொல்ல, கமல் மக்கள் பக்கம் திரும்பி கையை காட்டி நகைத்தார். 

"வேற யாராவது 'அழணுமா'.. சாரி பேசணுமா" என இறுதியில் கேட்டு ஆயிஷாவை நக்கல் செய்திருப்பார் கமல்ஹாசன். 

ஆயிஷா இப்படி attitude உடன் கமலிடம் பேசி இருப்பது இணையத்தில் பேசுபொருளாகி இருக்கிறது.  

அனேகமாக ஆயிஷா தான் அடுத்த வாரம் எலிமினேட் ஆவார் என நெட்டிசன்கள் கூறி வருகிறார்கள்.