பிக் பாஸ் 6-வது சீசன் தொடங்கி விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது.
அடிக்கடி வீட்டிற்குள் சண்டைகள் வந்தாலும் கூட சில காமெடியான சம்பளம் நடப்பதால் மக்கள் பிக் பாஸ் நிகழ்ச்சியை விரும்பி பார்த்து வருகிறார்கள்.
வாரம் வாரம் மக்கள் தங்களுக்கு பிடித்த போட்டியாளர்களுக்கு ஓட்டுக்களை பதிவு செய்து வருகிறார்கள்.
இந்த 6-வது சீசனில் தொகுப்பாளராக கலக்கி வந்த விஜே மகேஸ்வரி பிக் பாஸ் 6-வது சீசனில் கலந்துகொண்டார். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு 35 நாட்களுக்கு மேலாக அவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் விளையாடி வந்த நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை வீட்டிலிருந்து வெளியேறினார்.
இந்த நிலையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் அவரிடம் நீங்கள் பிக் பாஸ் 6 நிகழ்ச்சியில் யார் வெற்றி பெறுவார்கள் என்று நினைக்கிறீர்கள் என்ற கேள்வி கேட்கப்பட்டுள்ளது.
அதற்கு பதில் அளித்த அவர் விக்ரமன் கண்டிப்பாக 100% சதவீதம் இறுதி வரை வருவார்.தனா மற்றும் அசீம் இல்லாத ஒன்று விக்ரமிடம் இருக்கிறது. அவர் வெற்றிபெற அதிக வாய்ப்புகள் உள்ளது" என்று கூறியுள்ளார்.
மேலும், விஜே மகேஸ்வரி ரசிகர்களுக்கு சோகம் என்னவென்றால், இன்னும் கொஞ்ச நாட்கள் மகேஸ்வரி வீட்டில் இருந்திருக்கலாம் என்பது தான்.
மேலும் அவர் வைல்ட் கார்ட் என்ட்ரி மூலம் அவர் மீண்டும் பிக் பாஸ் வீட்டிற்குள் வருவாரா என்பதை பொறுத்திருந்து பார்பபோம்.