விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் நிகழ்ச்சி பிக்பாஸ் சீசன் 6 இதில் 21 பேர் போட்டியாளராக கலந்து கொண்டனர். 

இந்நிகழ்ச்சியை உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். 

இந்நிகழ்ச்சி 3 வாரங்களை கடந்துள்ளது. கடந்த 3 வாரங்களில் 2 போட்டியாளர்களான சாந்தி, அசல் கோளாறு ஆகியோர் எலிமினேட் செய்யப்பட்டனர். 

இதனிடையே 19 பேர் போட்டியாளர்களாக இருந்து வரும் நிலையில் இவர்களுக்கிடையே கடும் போட்டி இருந்து வருகிறது. 

இந்த நிலையில் தற்போது பிக்பாஸ் வீடு குறித்து அதிர்ச்சியூட்டும் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. 

இந்த நிகழ்ச்சியில் போட்டியாளர் அமுதவானன் கடந்த 3 நாட்களுக்கு முன்னர் திகில் ஊட்டும் கதையை கூறி தனலெட்சுமியை பயமுறுத்தினார்.

அதை நம்பிய தனலெட்சுமி கண்ணீர் மல்க பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறுவதாக கூறிய நிலையில், அவரை சக போட்டியாளர்கள் அது அமுதவானனின் கட்டுக்கதை எனக் கூறி சமாதானம் செய்தனர். 

இந்த நிலையில் மைனா என்கிற நந்தினி அமுதவானனிடம் அமானுஷ்ய சக்தி வீட்டில் இருப்பதாகவும் அதை அவர் உணர்ந்ததாகவும் கூறினார்.