நடிகர் அஜித் நடிப்பில் இயக்குநர் கௌதம் மேனன் இயக்கத்தில் கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் என்னை அறிந்தால். 

அப்படத்தில் நடிகர் அஜித்திற்கு மகளாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் அனிகா சுரேந்திரேன். 

பின்னர் மீண்டும் விஸ்வாசம் படத்திலும் நடிகர் அஜித்திற்கு மகளாக நடித்தார். 

இவர் மலையாள திரைப்படங்களில் அதிகமாக நடித்திருக்கிறார், 

மேலும் தமிழில் கடைசியாக விஜய் சேதுபதியின் மாமனிதன் திரைப்படத்தில் நடித்திருந்தார். 

இந்நிலையில் தற்போது அனிகா கதாநாயகியாக Oh my darling என்ற திரைப்படத்தில் நடிக்கவுள்ளாராம். 

அப்படம் மலையாளத்தில் உருவாக இருக்கிறது என சொல்லப்படுகிறது. 

மேலும் 12 வகுப்பு முடித்துவிட்டு கல்லூரியை தொடராமல் அவர் கதாநாயகியாக நடிக்க முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.