‘பீஸ்ட்’ திரைப்படத்திற்குப் பிறகு நடிகர் விஜய் தற்போது வம்சி பைடிபள்ளி இயக்கி வரும் ‘வாரிசு’ படப்பிடிப்பில் கலந்துகொண்டு நடித்து வருகிறார். 

இந்தப் படத்தில் ராஷ்மிகா மந்தனா, பிரகாஷ்ராஜ், ஷாம், சங்கீதா க்ரிஷ், சரத்குமார், பிரபு, யோகி பாபு உள்ளிட்ட பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து வருகிறது.

இந்தப் படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ள புதியப் படத்தில் விஜய் நடிக்கவுள்ளதாக கிட்டதட்ட உறுதியாகியுள்ளது.

லோகேஷ் கனகராஜின் ‘விக்ரம்’ படம், தாறுமாறான வெற்றியால், அவரது இயக்கத்தில் அடுத்ததாக உருவாகவுள்ள ‘தளபதி 67’ படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இந்நிலையில், இந்தப்படத்தில் நடிகை சமந்தாவை, விஜய்க்கு வில்லியாக நடிக்க வைக்கவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

இந்த தகவலை அறிந்த ரசிகர்கள் இந்த படத்தில் ரம்யா கிருஷ்ணனை போல வில்லியாக சமந்தா நடித்த சூப்பராக இருக்கும் என பேச தொடங்கியுள்ளனர்.

அது மட்டுமல்லாமல் நெல்சன் படங்களில் தொடர்ந்து நாயகியாக நடித்து வரும் பிரியங்கா மோகன் விஜய்க்கு ஜோடியாக தளபதி 67 படத்தில் நடிக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதுகுறித்து விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுகிறது. 

இந்த தகவல்கள் உண்மையாகவே நடந்தால் சூப்பராக இருக்கும் எனவும் கூறுகின்றனர்.

நடிகை சமந்தா இதற்கு முன்னதாக, விஜய்யுடன் 'கத்தி', 'தெறி' மற்றும் 'மெர்சல்' படங்களில் ஜோடியாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.