நாம் எந்த ஒரு சூழ்நிலையிலும் காலை உணவு தவிர்க்ககூடாது என்ற கருத்தை மருத்துவர்கள், நிபுணர்கள் என பலரும் கூறி வருகிறார். 

காலை உணவை தவிர்ப்பதால் உடல் நலத்தில் ஏற்படும் பாதிப்புகள் பற்றி தெரிந்து கொள்வோம்.

உங்களது சுறுசுறுப்பாகவும், சோர்வடையாமலும் வைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது காலை நேர உணவு. 

பெண்கள் பலரும் காலை உணவு தவிர்க்கும் பழக்கத்தை கொண்டுள்ளார்கள். அவ்வாறு செய்வோருக்கு டைப் 2 சர்க்கரை நோய் வருவதற்கான ஆபத்துகள் அதிகம் உள்ளன

காலை சாப்பட்டை தவிர்ப்பவர்கள் இருதயம் தொடர்பான நோயால் பாதிக்கப்பட்டு,. இறப்பையும் சந்திக்கிறார்கள் என ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. 

புற்றுநோய் மற்றும் புற்றுநோய் சார்ந்த பாதிப்புகள் ஏற்பட அதிக அளவிலான வாய்ப்புகள் உள்ளன. 

சீரான மனநிலையில் இல்லாமல் கோபம், வெறுப்பு, எதிர்மறை எண்ணங்களை உருவாக்கும். அதுமட்டுமில்லாமல் நினைவாற்றலும் மங்குவதோடு, அடிக்கடி சோர்வடைய செய்யும்.

உண்மையில் காலையில் சாப்பிடாமல் இருந்தால், இனிப்பு, கொழுப்பு நிறைந்த உணவுகளை உட்கொள்ள மனம் ஏங்கும். இதன் விளைவாக உடல் எடை குறையாமல், அதிகரிக்கவே செய்யும்