புத்தாண்டு துவங்கிவிட்டால் உடனே ஜிம்மில் போய் சேருவது பலரது வழக்கம்.
பின்னர் ஒரு வாரமோ அல்லது ஒரு மாதமோ கழித்து பணம் போனாலும் பரவாயில்லை என்று ஜிம்மில் இருந்து நின்று விடுவார்கள்.
பல மாதங்கள் ஜிம் பயிற்சி செய்துவிட்டு திடீரென நின்றுவிட்டால் உடலுக்கு பாதிப்பு எதுவும் ஏற்படாது என பலர் நினைக்கின்றனர்.
ஆனால் ஜிம் பயிற்சியை திடீரென கைவிடுவதால் உடலுக்கு சில பாதிப்புகள் ஏற்படும் என்பதே உண்மை.
திடீரென நீங்கள் ஜிம் பயிற்சியை கைவிட்டுவிட்டால் தசை வலி ஏற்படலாம். மேலும் இறுக்கமான தசைகள் படிப்படியாக தளர்ந்து வலுவிழக்கும்.
ஜிம் பயிற்சி செய்துகொண்டிருக்கும்போது உங்கள் உடலில் இருந்து அதிகளவு வியர்வை வெளியேறும். பயிற்சியை திடீரென நிறுத்திவிட்டால் வியர்வை வெளியேற்றம் குறையும்.
சிலருக்கு ஜிம் பயிற்சியை கைவிட்டால் உடல் எடை திடீரென அதிகரிக்கும்.