புகைப்பிடிக்கும் பழக்கம் உள்ளவர்களுக்கு நேரடியாக பல உடல்நல பாதிப்புகள் ஏற்படும்.
புகைப்பழக்கம் இருப்பவர்கள் பாதிக்கப்படுவதை போலவே புகைபிடிக்காதவர்களும் பாதிக்கப்படுகிறார்கள்.
சிகரெட் பிடிப்பவரின் அருகில் நிற்பதால் சுவாசக்குழாய் நோய் தொற்றுகள், நுரையீரல் புற்றுநோய், நுரையீரல் சார்ந்த நோய்கள், மூச்சுக்குழாய் அழற்சி, அடிக்கடி இருமல், தும்மல், மூச்சுத் திணறல் உள்ளிட்ட சுவாசப் பிரச்சனைகள் ஏற்படும்.
புகைப்பிடிப்போருக்கு இதய நோய் மற்றும் நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் மிக அதிகம்.
புகையை சுவாசிப்போருக்கு இதய நோய் ஏற்படும் அபாயம் 25%-30% மற்றும் நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் 20%-30% அதிகம்.
சிகரெட் பழக்கம் உள்ளவர்களின் அருகில் இருப்பதால் இளம் குழந்தைகளுக்கு சுவாச நோய்த்தொற்றுகள், ஆஸ்துமா உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படுகின்றன.
புகைபிடிக்கும் பழக்கம் உள்ளவர்கள் அந்த பழக்கத்தை நிறுத்த முயற்சி செய்யுங்கள்.
புகைபிடிக்கும் பழக்கம் உள்ளவர்கள் அந்த பழக்கத்தை நிறுத்த முயற்சி செய்யுங்கள்.