விஜய் டிவியில் கடந்த 2017ஆம் ஆண்டு முதல் பிக்பாஸ் நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி வருகிறது. இதுவரை 5 சீசன்கள் முடிந்துள்ள நிலையில், கடந்த அக்டோபர் மாதம் பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி தொடங்கியது.
இந்த நிகழ்ச்சியில் மொத்தம் 21 போட்டியாளர்கள் பங்கேற்றனர். அவர்கள் பெரும்பாலும் சின்னத்திரை பிரபலங்கள் தான்.
ஃபினாலேவுக்கு முந்தைய வாரமான இந்த வாரத்தில் விக்ரமன், ஷிவின், மைனா நந்தினி, கதிரவன், அசீம், ஏடிகே, அமுதவாணன் ஆகிய 7 பேர் மட்டுமே பிக்பாஸ் வீட்டில் உள்ளனர்.
ஃபினாலேவுக்கு முந்தைய வாரமான இந்த வாரத்தில் விக்ரமன், ஷிவின், மைனா நந்தினி, கதிரவன், அசீம், ஏடிகே, அமுதவாணன் ஆகிய 7 பேர் மட்டுமே பிக்பாஸ் வீட்டில் உள்ளனர்.
மிஞ்சிய 6 பேரில் ஒருவர் பணப் பெட்டியுடன் புறப்பட்டுவிடுவார். மீதம் இருக்கும் 5 பேரில் ஒருவர் தான் வின்னர்.
விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த விக்ரமன் வெற்றி பெற அதிகம் வாய்ப்பிருப்பதாகவும் திருநங்கையான ஷிவின் பிக்பாஸ் பட்டத்தை வெல்லலாம் என்றும் கூறி வருகின்றனர்.
அசீம்தான் பிக்பாஸ் டைட்டில் வின்னர் என்று கூறி வருகின்றனர் அவருடைய ரசிகர்கள். ஆனால் அசீம்முக்கு பிக்பாஸ் டைட்டில் கொடுத்தால் தவறான உதாரணம் ஆகிவிடும் என எதிர்ப்பும் எழுந்துள்ளது.
அசீம்முக்கு பிக்பாஸ் டைட்டிலை கொடுத்தால், அடுத்தடுத்த சீசன்களில் பங்கேற்கும் போட்டியாளர்களும் அவரை போன்றே சக போட்டியாளர்களை மதிக்காமல் நடந்து கொள்வார்கள் என எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
ஆனால் விஜய் டிவி அசீம்முக்குதான் டைட்டிலை கொடுக்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. யார் பிக்பாஸ் சீசன் 6 டைட்டிலை தட்டி தூக்கப் போகிறார்கள் என்பது அடுத்த வாரம் தெரிந்து விடும்