அமரர் கல்கியின் பகழ் பெற்ற “பொன்னியின் செல்வன்” நாவலை அடிப்படையாகக் கொண்டு, இந்தியாவின் மிக முக்கிய டைரக்டர்களில் ஒருவரான மணிரத்னம் இயக்கியுள்ளார். 

சோழப் பேரரசின் அரியணைக்கு வரும் தொடர் ஆபத்துகளும், வீரர்களுக்கும் சதிகாரர்களுக்கும் இடையில் நிகழும் போராட்டங்களும், சாதனைகளும், நகைச்சுவையும், தியாகங்களும் கொண்ட விறுவிறுப்பான கதையான “பொன்னியின் செல்வன்” கதையை திரையில் காண பல கோடி ரசிகர்கள் காத்துக்  கொண்டிருக்கிறார்கள்.  

ராஜராஜ சோழன் ஈழத்தில் ஏன் படையெடுத்தார்? தன் தந்தை சுந்தர சோழர் மரணிப்பதை அடுத்து, சிற்றப்பா ஆதித்த கரிகாலனுக்கு அரியணை உரிமை வர, இளவரசர் ராஜ ராஜ சோழன் இலங்கைக்கு செல்கிறார், 

அப்போதும் இலங்கையில் சோழனின் படையெடுப்பால் மக்கள் வாழ்வு நிலைகுலைந்து, பஞ்சம் - பட்டினி உள்ளிட்ட போர் விளைவுகள் ஏற்பட்டன. 

அப்போது, தமிழ்நாட்டின் சோழ நிலத்தில் இருந்து எண்ணெய் வித்துக்கள், உணவு பொருட்களை கொண்டு இலங்கைக்கு கொண்டுவர உத்தரவிடுகிறார் ராஜராஜன். அப்போது அதை தடுத்து வாதம் பண்ணிய பழுவேட்டரையர், ஒரு நாட்டில் போர் தொடுத்தால், அந்த நாட்டில் இருந்துதான் நாம் செல்வங்களை கொண்டுவரவேண்டுமே தவிர, நாம் நம் செல்வங்களை அங்கு கொண்டு செல்ல கூடாது என்று கூறுகிறார்.  

பொன்னியின் செல்வன் கதையில் எந்த இடத்திலும் ராஜராஜன் என்று குறிப்பிடவில்லை. ஏனென்றால் பொன்னியின் செல்வன் நடைபெறும் காலத்தில் அருள்மொழிவர்மன் இளைஞராக இருக்கிறார்.  

அவர் அரச பதவி ஏற்ற பிறகுதான் அவர் ராஜராஜனாகிறார். அதனாலேயே அவர் நாவலின் நாயகன் பொன்னியின் செல்வனாக வலம் வருகிறார்.” என்று பகிர்ந்துகொண்டார்.