தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஒரு ஹீரோவாக வலம் வருபவர் நடிகர் அஜித்குமார்
இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த வலிமை திரைப்படம் வெற்றி படமாக மாறியதைத் தொடர்ந்து தனது 61 வது திரைப்படத்தில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார்.
அஜித் சினிமா உலகில் வருடத்திற்கு ஒரு படம் கொடுக்க காரணம் அவரது ரசிகர்கள் தான் என சொல்லப்படுகிறது.
அஜித்திற்கு முதுகில் ஏற்பட்ட ஆபரேஷன்கள் இருந்தாலும் ரசிகர்களுக்காக அவர் நடித்து வருகிறார் அந்த வகையில் இந்த படத்திலும் ரொம்ப கஷ்டப்பட்டு நடித்து வருகிறார்.
திருச்சியில் 47-வது துப்பாக்கி சுடுதல் போட்டி நடந்தது அதில் இவரும் கலந்து கொண்டார் துப்பாக்கி சுடுதல் போட்டியில் சிறப்பாக செயல்பட்டு ஆறு பதக்கங்களை தட்டி தூக்கி உள்ளார்.
அஜித் துப்பாக்கி சுடுதல் இடத்திற்கு சென்ற பொழுது அந்த இடத்தை சுற்றி ரசிகர்கள் குவிந்து உள்ளனர். பின் ரசிகர்களை பார்த்து விட்டு தான் அஜித் திரும்பினார்.
அந்த கூட்டத்தில் இருக்கும் ரசிகர்களுக்கு எந்த விதமான அசம்பாவிதம் நடந்துவிடக்கூடாது என போலீசாரிடம் கேட்டுக் கொண்டாராம் மற்றும் ரசிகர்களிடமும் கேட்டுக் கொண்டார்.
அதுபடி ரசிகர்கள் எந்த பிரச்சனையும் செய்யாமல் அஜித்தை பார்த்துவிட்டு சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அவர்களிடமும் நடிகர் அஜித் மரியாதையாக நடந்து கொண்டது தற்போது ரசிகர்களை கவர்ந்திழுத்துள்ளது
எல்லோரிடமும் மிக சகஜமாக பழகக்கூடியவர் அஜித். இதிலிருந்து மேலும் ரசிகர்களுக்கும் மக்களுக்கும் பிடித்த நாயகனாக தற்போது பார்க்கப்படுபவர் அஜித்.