விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய் உள்ளிட்டவர்கள் நடிப்பில் உருவாகியுள்ளது பொன்னியின் செல்வன். 

இந்தப் படத்தின் டீசர் வெளியீடு நேற்று மாலை மிகவும் பிரம்மாண்டமான அளவில் நடைபெற்றது.

சுந்தர சோழனின் மகன் பட்டத்து இளவரசனான ஆதித்த கரிகாலன் கேரக்டரில் நடிக்கிறார் விக்ரம் 

சுந்தர சோழனின் கடைசி மகன், ஆதித்த கரிகாலனின் தம்பி, பொன்னியின் செல்வனாக ஜெயம் ரவி. 

வாணர் குலத்தை சேர்ந்த சோழ படைத்தளபதி கேரக்டரில் கார்த்தி 

பழுவூர் ராணி கேரக்டரில் ஐஷ்வர்யா ராய் 

சுந்தர சோழனின் மகளாக, ஆதித்த கரிகாலன், ராஜ ராஜ சோழனின் சகோதரியாக குந்தவை கேரக்டரில் த்ரிஷா 

இவர்களுடன் ஜெயராம், பிரகாஷ்ராஜ், ரஹ்மான், பிரபு, சரத்குமார் உள்ளிட்டோரும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 

டீசரில், ஐஸ்வர்யாவும் - த்ரிஷாவும் சந்தித்துக் கொள்ளும் காட்சி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. 

டீசரைப் பார்த்த ரசிகர்கள் பிரமாண்டத்தின் உச்சமாய், தமிழ் சினிமா வரலாற்றில் பொன்னியின் செல்வன் படத்துக்கு தனியிடம் இருக்கும் என்கிறார்கள்.