தனுஷ் சினிமாவில் 20 ஆண்டுகளுக்கு முன்பு ‛துள்ளுவதோ இளமை' படத்தின் மூலம் அறிமுகமானார்.

ஆனால் தனுஷின் பயணம் இன்று நினைத்து கூட பார்க்க முடியாத உயர்த்திற்கு சென்றதுள்ளது. 

அதற்கு அவர் சினிமாவின் மீது வைத்துள்ள தீராக காதல் தான் காரணம் என்று கூறலாம்.

செல்வராகவன் திரைக்கதையில் கஸ்தூரி ராஜா இயக்கிய துள்ளுவதோ இளமை திரைப்படம் 2002 இல் வெளியானது. 

ஷெரின், அபிநய், ஷில்பா உள்பட பலர் நடித்திருந்தார்கள். யுவன் இசை அமைத்திருந்தார்.

முழுக்க, முழுக்க டிஜிட்டலாக மாற்றப்பட்டு துள்ளுவதோ இளமை திரைப்படம் நாளை ஜுலை 8 ஆம் தேதி சென்னை, கோவை உள்ளிட்ட சில குறிப்பிட்ட திரையரங்கில் வெளியாக உள்ளது. 

சென்னையில் பிவிஆர், ஈவிபி, மாயாஜால் உள்ளிட்ட மல்டிபிளக்ஸ் திரைகள் உள்பட 25 தியேட்டர்களில் வெளியாகிறது. 

குரு ராஜா இண்டர்நேஷனல் நிறுவனம் இதனை வெளியிடுகிறது. 

20 ஆண்டுகளுக்கு பிறகு துள்ளுவதோ இளமை வெளியாவது தனுஷ் ரசிகர்களுக்கு மட்டுமல்ல சினிமா ரசிகர்களுக்கே கொண்டாட்டமாக மாறியுள்ளது.