டிஸ்மிஸ் செய்த ஊழியரை மீண்டும் பணியில் அமர்த்திய ஜொமைட்டோ: என்ன காரணம்?

ஜொமைட்டோ நிறுவனத்தின் கஸ்டமர் கேர் பிரிவில் பணி செய்யும் ஊழியர் ஒருவர் மதுரையைச் சேர்ந்த விகாஸ் என்ற வாடிக்கையாளரிடம் இந்தி மொழி குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் அந்த ஊழியரை ஜொமைட்டோ நிர்வாகம் டிஸ்மிஸ் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தநிலையில் வாடிக்கையாளர் விகாஸ் அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க மீண்டும் அந்த ஊழியரை பணியில் அமர்த்தி கொண்டதாக ஜொமைட்டோ நிறுவன தலைவர் தெரிவித்துள்ளார் இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:

நினைவில் கொள்ளுங்கள், எங்கள் கால் செண்டரில் உள்ளவர்கள் இளைஞர்கள், அவர்கள் தங்களது கற்றல் மற்றும் தொழில் வாழ்க்கையின் தொடக்கத்தில் உள்ளனர். அவர்கள் மொழிகள் மற்றும் பிராந்திய உணர்வுகளில் நிபுணர்கள் அல்ல. நானும்தான். நாம் அனைவரும் ஒவ்வொருவரின் குறைபாடுகளை பொறுத்துக்கொள்ள வேண்டும்.

மேலும் ஒருவருக்கொருவர் மொழி மற்றும் பிராந்திய உணர்வுகளைப் புரிந்துக் கொள்ள வேண்டும். தமிழ்நாட்டை நாங்கள் நேசிக்கிறோம். நாட்டின் மற்ற பகுதிகளை எவ்வளவு நேசிக்கிறோமோ அதே அளவுக்கு அதிகமாகவும் இல்லாமல் குறைவாகவும் இல்லாமல் நேசிக்கிறோம். நாம் எவ்வளவு வேறுபடுகிறோமோ அதே அளவுக்கு ஒன்றாகவும் இருக்கிறோம்” என தெரிவித்துள்ளார்.

 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment