சர்ச்சைக்குரிய கஸ்டமர்கேர் நபரை வேலையில் இருந்து தூக்கிய ஜொமைட்டோ!

இந்தியன் என்றால் இந்தி மொழி தெரிந்திருக்க வேண்டும் என்றும் இந்தி நமது நாட்டின் தேசிய மொழி என்றும் அந்த மொழி தெரியாததால் உங்களுக்கு பணம் திருப்பி தரமுடியாது என்றும் கூறிய ஜொமைட்டோ நிறுவனத்தின் கஸ்டமர்கேர் ஊழியர் ஒருவர் பணிநீக்கம் செய்யப்பட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மதுரையைச் சேர்ந்த விகாஸ் என்பவர் கஸ்டமர்கேரிடம் தொடர்பு கொண்டபோது உங்களுடைய பிரச்சனையை ஹிந்தியில் வழங்காததால் உங்களுக்கு பணம் திரும்ப கிடையாது என்று கூறியதாக தெரிகிறது

இது குறித்து விகாஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்து இருந்த நிலையில் ஜொமைட்டோவுக்கு எதிராக பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டது. இதனை அடுத்து ஜொமைட்டோ நிறுவனம் விளக்கம் அளித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:

எங்கள் வாடிக்கையாளர் சேவை முகவரின் நடத்தைக்கு வருந்துகிறோம். வேற்றுமையில் ஒற்றுமை என்ற நம் தேசத்தின் மாறுபட்ட கலாச்சாரத்தின் மீதான எதிர் கருத்தை வாடிக்கையாளரிடம் காட்டிய ஊழியரை பணி நீக்கம் செய்து உள்ளோம். பணி நீக்கம் என்பது சரியான நடவடிக்கை என நம்புகிறோம். மேலும் மக்களின் உணர்வுகளுக்கு எதிராக கருத்தைப் பகிர கூடாது என தெளிவாக நாங்கள் எங்கள் முகவர்களுக்கு தொடர்ந்து பயிற்சி அளிக்கிறோம். இந்த வாடிக்கையாளர் சேவை முகவரின் அறிக்கைகள் மொழி அல்லது சகிப்புத்தன்மை குறித்த நிறுவனத்தின் நிலைபாட்டை குறிக்கவில்லை,

ஒரு நிறுவனமாக நாங்கள் முழு பயன்பாட்டிற்காக தமிழ் செயலியை உருவாக்கினோம். நாங்கள் ஏற்கனவே மாநிலத்திற்கான தமிழை சந்தைப்படுத்துதல் முயற்சிகளை உள்ளூர்மயமாக்கியுள்ளோம். எடுத்துக்காட்டாக நாங்கள் மாநிலத்திற்கான உள்ளூர் பிராண்ட் அம்பாசிடராக அனிருத்தை தேர்வு செய்துள்ளோம். மேலும் கோயம்புத்தூரில் உள்ள ஒரு உள்ளூர் தமிழ் கால் சென்டர் சர்வீஸ் சென்டரை உருவாக்கும் பணியிலும் இருக்கின்றோம். உணவு மற்றும் மொழி ஒவ்வொரு மாநிலத்தின் கலாச்சாரத்தின் இரண்டு அடித்தளங்கள் என்பதை நாங்கள் புரிந்து உள்ளோம். அவை இரண்டையும் நாங்கள் முழுமையாக உணர்ந்து உள்ளோம் என மீண்டும் தெரிவித்துக் கொள்கிறோம் என குறிப்பிட்டுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment