Connect with us

சிறுநீர் கழித்த வழக்கில் ஏபிவிபி முன்னாள் தலைவர் சுப்பையா கைது!

2022 02 17 206918 94f45d50 7 1

News

சிறுநீர் கழித்த வழக்கில் ஏபிவிபி முன்னாள் தலைவர் சுப்பையா கைது!

சிறுநீர் கழித்த வழக்கில் ஏபிவிபி முன்னாள் தலைவர் சுப்பையா கைது!

அண்டை வீட்டாருடன் ஏற்பட்ட தகராறு காரணமாக அவர்களது வீட்டு வாசலில் சிறுநீர் கழித்த ஏபிவிபி முன்னாள் தலைவரும், மருத்துவருமான சுப்பையா கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னை நங்கநல்லூர் ராம்நகர் பகுதியில் அமைந்துள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ஏபிவிபி அமைப்பின் தேசிய செயற்குழு சிறப்பு அழைப்பாளருமான சுப்பையா வசிக்கிறார்.

அவரது வீட்டின் அருகே 62 வயது மூதாட்டி வசித்து வருகிறார். கடந்த 2019ம் ஆண்டு மூதாட்டிக்கும், சுப்பையாவிற்கு இடையில் கார் நிறுத்துவது தொடர்பாக இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

இதனால் ஆத்திரமடைந்த சுப்பையா அந்த பெண்ணின் வீடு முன்பு சிறுநீர் கழித்த நிலையில், இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த சம்பவம் தொடர்பாக பெண்ணின் தரப்பில் ஆதம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பதை அடுத்து சுப்பையா மீது பெண் வன்கொடுமை உட்பட இரு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடைபெற்றது.

இதன் தொடர்ச்சியாக சுப்பையாவை ஆதம்பாக்கம் காவல் நிலைய போலீசார் கைது செய்தனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in News

To Top