
பொழுதுபோக்கு
சுந்தர்.சி படத்தில் யுவனின் பேபி கேர்ள் ஆல்பம் ! தீயாய் பரவும் வீடியோ!
இயக்குனர் சுந்தர்.C- நடிகர் ஜெய் இணைந்து நடித்த பட்டாம்பூச்சி திரைப்படம் சமீபத்தில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது.அதை தொடர்ந்து ஜெய் மற்றும் ஜீவா ,சுந்தர் சி ஆகியோர் மூவர் கூட்டணியில் யுவன் ஷங்கர் ராஜா இசையமைய இருக்கும் புதிய படத்தை குஷ்புவின் அவ்னி பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர். மொத்தம் 8 பாடல்கள் இந்தப்படத்தில் இடம்பெற்றுள்ளது.
அம்ரிதா, ரைசா வில்சன், ஐஸ்வர்யா தத்தா, மாளவிகா ஷர்மா, திவ்யதர்ஷினி, சம்யுக்தா,பிரதாப் போத்தன், விச்சு விஸ்வநாத்,அருணா பால்ராஜ், பேபி விர்த்தி ஆகியோரும் இந்த படத்தில் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டைட்டில் சில வாரங்களுக்கு முன் வெளியாகியுள்ளது. படத்திற்கு காஃபி வித் காதல் என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.
மேலும் முக்கிய கதாபாத்திரங்களில் யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி நடிக்க உள்ளனர்,இந்த படத்தின் போஸ்ட் புரொடக்சன் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.
இந்த படத்தில் இருந்து முன்னதாக ரம்பம்பம் ஆரம்பம் என்கிற ரீமிக்ஸ் பாடல் சில நாட்களுக்கு முன்பு வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. ஏற்கனவே இளையராஜா இசையமைத்த ‛மைக்கேல் மதன காமராசன்’ படத்தில் இடம் பெற்ற ‛ரம் பம் பம் ஆரம்பம்…’ பாடல் தான் இது.
இந்தியாவில் அதிக சம்பளம் வாங்கும் வில்லனாக விஜய் சேதுபதி!
இந்த நிலையில் அடுத்ததாக பேபி கேர்ள் என்கிற இன்னொரு பாடல் வெளியாகி உள்ளது. இந்த பாடலை பா.விஜய் எழுதி பாடகர் சித் ஸ்ரீராம் பாடியுள்ளார் , மேலும் இந்த பாடலுக்கு யுவன் சங்கர் ராஜா பாடி, ஒரு சிறப்பு வீடியோ ஆல்பம் வேண்டும் என சுந்தர்.C கேட்டிடத்திற்கு இணங்க, யுவன் சங்கர் ராஜாவும் பாடிய வீடியோ தற்போது யூட்யூப் தளத்தில் இந்த பாடல் வெளியாகி ரசிகர்களின் மனதை மகிழ்வித்து வருகிறது.
