News
சினிமாவில் கதாநாயகனாக மாறும் யூடியூப் பிரபலம்

முன்பெல்லாம் சினிமாவில் வரவேண்டுமென்றால் ஆண்டுக்கணக்கில் காத்திருக்க வேண்டும். பல நடிகர் நடிகைகளிடம் தொடர்பில் இருந்து கொண்டு அவர்கள் மூலம் கொஞ்சம் கொஞ்சமாக படிப்படியாக சினிமாவுக்கு வர வேண்டும்
ஆனால் தற்போது இந்த நவீன தொழில்நுட்ப காலத்தில் யூட்யூபில் ஒரு சில வீடியோக்கள் பதிவு செய்து அதன் மூலம் பிரபலமாகி, அதன்பி ள் சினிமாவிலும் வெகு எளிதாக நுழைந்து விடுகின்றனர்
அந்த வகையில் யூடியூபில் பிரபலமான ஒருவர் தமிழ் சினிமாவில் ஹீரோவாக மாறப்போகிறார். ஹைலைட் சினிமாஸ் என்ற நிறுவனம் தயாரிக்கவுள்ள புதிய திரைப்படத்தில் யூடியூப் பிரபலம் ஒருவர் ஹீரோவாக அறிமுகமாக இருப்பதாகவும் இது குறித்த தகவல்கள் இன்று மாலை 6 மணிக்கு அறிவிக்கப்படும் என்றும் ஹைலைட் சினிமா நிறுவனம் சமூகவலைதளத்தில் தெரிவித்துள்ளது
சினிமாவில் ஹீரோவாகும் அந்த யூடியூப் பிரபலம் யார் என்பதை தெரிந்துகொள்ள இன்று மாலை 6 மணி வரை பொறுத்திருப்போம்
